இந்த ஆண்டின் முக்கிய விண்கல் பொழிவுகளில் ஒன்றான “தெற்கு டெல்டா அக்வாரிட்ஸ்” (Southern Delta Aquariids) விண்கல் பொழிவு, இன்று (ஜூலை 29) இரவு காணக்கூடியதாக இருக்கும் என வானியலாளர் மற்றும் பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்தார்.
கும்ப நட்சத்திர தொகுதியை அண்மித்த பகுதியில் இந்த விண்கல் பொழிவு நிகழ்வதால், அதற்கேற்பவே இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விண்கல் பொழிவு இன்று இரவு 9.00 மணிக்கு கிழக்கு திசையிலிருந்து எழும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை இரவு முழுவதும் மற்றும் அதிகாலையிலும் காணலாம்.
வானில் உச்ச நிலையை எட்டிய பின்னர், இந்த நிகழ்வு மேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிகழ்வின் போது மணிக்கு சுமார் 15 முதல் 25 வரை விண்கற்கள் விழும் நிகழ்வுகள் அவதானிக்கப்படலாம் என கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
விண்கல் பொழிவைக் காண ஆர்வமுள்ளவர்கள் கிழக்கு திசை நோக்கி பார் மற்றும் வெளிச்சமில்லா இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.








