19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்றும், இன்று ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்கப்படவுள்ளதாக முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

எனினும், தபால் மா அதிபர் ருவன் சத்குமார, ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாக கூறி, வேலைநிறுத்தத்தை கைவிட்டு கலந்துரையாடலுக்கு வருமாறு தொழிற்சங்கங்களை கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், ஆசிரியர்கள் குழு ஒன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. குழந்தைகளை பாடசாலைகளில் சேர்க்கும் புதிய சுற்றறிக்கை தொடர்பில் அரசின் முடிவுக்கு எதிராக இந்திக அபேசிங்க தலைமையில் ஆசிரியர்கள் நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here