தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கும், பாதுகாக்கும் சபைக்கும் அனுப்புவதற்காக இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்ட வருகின்றது.

அந்தவகையில் இந்த போராட்டமானத்தின் பகுதி வேலைத்திட்டம் இன்றையதினம்(30) நவாலி மற்றும் மானிப்பாய் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு கையொப்பங்களை பதிவு செய்தனர்.

(யாழ்ப்பாண நிரூபர் பு. கஜிந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here