Sunday, May 31, 2026
No menu items!

செம்மணி

யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் தீப்பந்தப் போராட்டம் ; ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு!

செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (01.10.2025) நிறைவுக்கு வந்தது. இறுதி நாளில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு...

யாழில்.கிட்டுப் பூங்கா முன்றலில் இருந்து செம்மணி வரை மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி..!!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதிகோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் ஒருபகுதியாக யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்கா முன்றலில் இருந்து செம்மணி வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. அந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிட்டு பூங்கா முன்றலில் இருந்து இன்றைய தினம் காலை 11 மணியளவில் பேரணியாக சென்று,...

வட கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டி யாழில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!

தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கும், பாதுகாக்கும் சபைக்கும் அனுப்புவதற்காக இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்ட வருகின்றது. அந்தவகையில் இந்த போராட்டமானத்தின் பகுதி வேலைத்திட்டம் இன்றையதினம்(30)...

வடக்கு கிழக்கில் பாரிய கையெழுத்துப் போராட்டம் – செம்மணி அகழ்வுகளுக்கு சர்வதேச விசாரணை கோரி!

செம்மணியின்அவலங்களுடன்  இதுவரைகாலமும் இராணுவத்தால் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கும் காணாமலாக்கப்பட்டமைக்கும் நீதியும் பரிகாரமும் கோரி எதிர்வரும் 29 ஆம் திகதியன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டத்தை முன்னிறுத்தி ஜனநாயக  தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சி, ரெலோ, புளெட்,...

செம்மணியில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள்..!!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்றைய தினம் வியாழக்கிழமை  புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 07 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 12 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 47 எலும்புக்கூட்டு...

செம்மணியில் 3 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்!!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய  தினம்(24) மேற்கொண்ட  அகழ்வின் போது மூன்று மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 88ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப்...

கரவெட்டி பிரதேச சபையில் செம்மணிக்கு நீதி கோரி ஏகமனதாக தீர்மானம்!

செம்மணிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்காக வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் சபை அமர்வு நேற்று புதன்கிழமை(23) காலை 9.00 மணியளவில் தவிசாளர் கு. சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட...

செம்மணி படுகொலைக்கு நீதிகோரி கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

செம்மணியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதிகோரும் நோக்கில், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. பலரை ஈர்த்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சம்பந்தப்பட்ட கொலைகளுக்கு உடனடி விசாரணை மற்றும் நீதிகான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பேரவலத்துடன் கோரப்பட்டு வருகின்றது.

தமிழர்களாகிய எமது நெஞ்சம் பதைபதைக்கிறது – ரி.ராஜேந்தர்!!

செம்மணியில் தொடர்ந்து என்புக்கூடுகள் மீட்கப்படுவது தொடர்பில் தென்னிந்திய இயக்குநரும், நடிகரும், இசையமைப்பாளருமான ரி.ராஜேந்தர் கருத்து வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அந்தப் பகுதியில் இராணுவத்தின் வெறியாட்டத்தையும், அந்த ஓநாய்களினுடைய களியாட்டத்தையும், மயானத்தில் அவர்கள் ஆடிய ஆட்டத்தையும் தமிழர்கள் மீது அவர்கள் கொண்ட காட்டத்தையும் சர்வதேச உலகம் தெரிந்து கொள்ள...

செம்மணி புதைகுழி அகழ்வில் மேலும் அதிர்ச்சி: அத்திவார குழியிலும் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடிகால் அமைப்பை உருவாக்குவதற்காக அத்திவாரக் குழி நேற்று தோண்டப்பட்ட போதே,  கூடுதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மழையுடனான காலநிலை காரணமாகவும், அகழ்வுப் பணிகளில் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், வடிகால் கட்டமைப்புக்கான தொழில்திறனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அந்த இடத்தில் மனித...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img