முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியா பயணமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயணம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.தே.கவின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் மேலும், இன்று நடைபெறவுள்ள நுகேகொடை கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பது சாத்தியமில்லை என்றும்,
இரண்டாம் கட்ட தலைமைத்துவத்தை உருவாக்குவதே ரணிலின் தற்போதைய அரசியல் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜீவன் தொண்டமானின் திருமணம் வரும் 23ம் திகதி தமிழ்நாட்டின் திருப்பத்தூர் பகுதியில் நடைபெறவுள்ளது.
தொண்டமான் குடும்பத்துக்கும் மணமகள் தரப்புக்கும், ஜீவனின் தாத்தாவான செளமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்தே நெருங்கிய குடும்பத் தொடர்பு உள்ளதாக அறியப்படுகிறது.

இந்த திருமணத்தில் இலங்கையிலிருந்து பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் பங்கேற்க உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here