நுகேகொடையில் நேற்றையதினம்(22 .12.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாக விசாரனைகளிள் தெரிய வந்துள்ளது.
கடந்த 6ஆம் திகதி படோவிட அசங்க எனும் போதைப் பொருள் வர்த்தகரின் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகமொன்றில் கொள்ள்ப்பட்டிருந்தார்.
மேலும் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ஒத்தாசை வழங்கிய சந்தேகத்தின் பெயரில் படோவிட அசங்க குழுவினரே நேற்றையதினம்(22.12..2025) மாலை துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை விசாரனைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் சம்பவத்தில் காயமடைந்த சமந்த எனும் இளைஞன் தற்போதைக்கு களுபோவிலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளைமேற்கொண்டுள்ளனர்.








