கிரிபத்கொட மற்றும் ராகம பகுதிகளில் வனவிலங்கு அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பின் போது பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பொருட்களுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த இருவரிடமும் 32 கிலோ கிராம் பவளப்பாறை, இலங்கை கொம்பு சிப்பி (Catadontus marianus),
சிலந்தி சங்கு (Lambis lambis),புலி பல், கடல் விலங்கின் ஒரு பகுதி ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
ஜூலை 3 ஆம் திகதி இலங்கை விமானப்படையிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரிதிகல தகவல் மற்றும் ஆய்வு மையம் இந்த சுற்றிவளைப்பை நடத்தியது.
கைது செய்யப்பட்ட 20 மற்றும் 26 வயதுடைய சந்தேகநபர்கள் தலா ரூ. 100,000 வனவிலங்கு பிணையில் விடுவிக்கப்பட்டு, பின்னர் மஹர மற்றும் வெலிசர நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
பவளம் மற்றும் ஏனைய பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பாகங்களை சேகரித்தல், வைத்திருத்தல், கொண்டு செல்லுதல் அல்லது விற்பனை செய்தல் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.







