இலங்கை வந்துள்ள இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.

இன்று (23) முற்பகல் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேற்று(22) பிற்பகல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக எஸ். ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவை மேலும் உறுதிப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

முக்கிய சந்திப்புகளின் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று (23) பிற்பகல் நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here