நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், அதற்குப் பதிலாக அச்சட்டத்தின் திருத்தப்பட்ட பதிப்பைத் தயாரித்து வருவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்ப்பது தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது தற்போதைய அரசாங்கம் அதனை எதிர்த்ததாகவும், அதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தேவை என நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

“நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை அதன் தற்போதைய வடிவத்தில் நடைமுறைப்படுத்தும் எண்ணம் தமக்கு இல்லை என்றும அது திருத்தப்பட்டு வருகிற நிலையில் கடந்த வாரம் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றோம்,” என்றும் அவர் கூறினார்.

மக்களின் உரிமைகளைப் பாதிக்கக்கூடிய சட்டங்களை ஒழிப்பதற்கோ அல்லது சீர்திருத்துவதற்கோ அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகவும் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் அடிப்படை உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக சுதந்திரங்களைப் பாதுகாக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்கும் சுதந்திரம் குடிமக்களுக்கு இருப்பதை உறுதி செய்வதோடு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here