வாகன உரிமையாளர்கள், வாகன காப்பீட்டை பெற்றுக்கொண்டு, பின்னர் பணத்தைச் செலுத்துவதற்கு 60 முதல் 90 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

எதிர்வரும் மே 1 ஆம் திகதி முதல் காப்பீடு எடுத்த 30 நாட்களுக்குள் காப்பீடு பணம் செலுத்த வேண்டும் எனவும் எதிர்காலத்தில் 60-90 நாட்கள் வழங்கப்படாது எனவும் இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா/இங்கிலாந்து போன்ற பிற நாடுகளில், முதலில் பணம் செலுத்திவிட்டு, பிறகு காப்பீடு பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது எனவும் இலங்கையும் அதே விதியைப் பின்பற்ற விரும்புகிறது எனவும் ஆணைக்குழுவின் தலைவர் லசித விமலரத்ன கூறியுள்ளார்.

இந்த திட்டம், காப்பீட்டுத் துறையை மேலும் முறையாகவும் பாதுகாப்பாகவும் மேம்படுத்துகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்காலத்தில் இந்த வசதி இல்லாதொழிக்கப்படும் எனவும் காப்பீடு கொடுப்பதற்கு முன்பு, வாகன உரிமையாளர்கள் முழுப் பணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here