அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் கடந்த சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்த இரவு விருந்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவர் நேற்று திங்கட்கிழமையன்று முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
கொலை முயற்சி மற்றும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை சந்தேகநபர் எதிர்கொண்டுள்ளதாக நீதிமன்ற நடவடிக்கைகள் தெரிவிக்கின்றன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 31 வயதான குறித்த சந்தேக நபர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளை மாளிகையில் இடம்பெறும் செய்தியாளர்களின் இரவு விருந்து, பொதுவாக ஒரு கொண்டாட்ட நிகழ்வாகும். அங்கு துப்பாக்கிச் சூடு நடப்பது மிகவும் அரிதான மற்றும் தீவிரமாக ஆராய வேண்டிய விடயமாக பார்க்கப்படுகின்றது.








