களுத்துறை இறைவரி காரியாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (30) இரவு குறித்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் வரி தரவு அமைப்புகளுக்கு எந்தவித சேதமோ அல்லது இடையூறோ ஏற்படவில்லை என்றும் இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ தெரிவித்தார்.

தொலைநிலை அணுகல் (remote access) மூலம் கணினி இணைப்பை மீண்டும் ஏற்படுத்துவது உட்பட, இயல்பு நிலையை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

களுத்துறை இறைவரி அலுவலகத்தில் அவசர சேவைகள் தேவைப்படும் நபர்கள், இயல்பு நிலை திரும்பும் வரை அருகிலுள்ள கிளை அலுவலகத்தையோ அல்லது திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தையோ அணுகலாம் என்றும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here