பௌத்த பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளைக் கடுமையாக அமுல்படுத்தவும் புதுப்பிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் துறவிகளிடையே ஒழுங்கை நிலைநாட்டுவதும், முறைகேடுகளை தவிர்ப்பதுவும் இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்ல விரும்பும் பிக்குகளுக்கான சட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படுவதை அமைச்சு உறுதி செய்யும் என்று புத்தசாசன சமய, மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திசநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னர், சர்வதேச அளவில் பயணம் செய்ய எந்தவொரு பிக்குவும் தத்தமது ததைமையை பிாந்திய நாயக்க தேரர் மற்றும் தத்தமது பீடங்களின் மகாநாயககக தேரர்களிடபரிந்துரைகளைப் பெற வேண்டும் என்ற ஒரு முறைமை நடைமுறையில் இருந்தது.

காலப்போக்கில் இந்த நடைமுறை சீர்குலைந்துவிட்டதாகவும் பிக்குகளின் எதிர்கால வெளிநாட்டுப் பயணங்கள் அனைத்திற்கும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு இந்த முறைமையை திறம்படச் செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைத்து பௌத்த பிரிவுகளையும் (நிகாயங்கள்) பிரதிநிதித்துவப்படுத்தும் பதிவாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நடைபெற்ற நீண்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டங்களின் போது, ​​பிக்குகளின் நடத்தை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

இதற்கமைவாக பிக்குகளின் எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்திற்கும் முன்பாக, நாட்டின் தலைவரிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது

முறையான சோதனைகள் இன்றி பௌத்த துறவிகள் வெளிநாடு சென்று வருகின்றனர். இவ்வாறு சென்றவர்களில் அண்மையில் 21 துறவிகள் போதைப்பொருள் வைத்திருந்ததாகப் பிடிபட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here