மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலையில் சிறியளவில் அதிகரிக்க ஏற்படக்கூடும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், அரசாங்கம் ஏற்கனவே பொதுமக்களுக்கு இயன்ற அளவு நிவாரணம் வழங்கியுள்ளது என்றும், ஆனால் ஒரு “சிறிய அதிகரிப்பு” தவிர்க்கமுடியாதது என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும், அத்தகைய விலைத் திருத்தம் எப்போது நடைபெறும் என்பதை ஜனாதிபதி குறிப்பிடவில்லை.
ஏப்ரல் 30 அன்று எதிர்பார்க்கப்பட்ட மாத இறுதி எரிபொருள் விலைத் திருத்தம் நடைபெறாத நிலையில் அவரிடம் இருந்து இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.







