சீன பிரஜைகள் 19 பேரின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், வெலிக்கடை காவல் நிலைய பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டுகளை விடுவிப்பதற்கு , ஒவ்வொரு நபரிடமிருந்தும் 300,000 ரூபாய் கையூட்டல் கோரியதாக குறித்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் வெயங்கொடவில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here