இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(30) நள்ளிரவு முதல் சகல எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, ஒரு லீற்றர் லங்கா வொயிட் டீசலின் விலை ரூ. 15 அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 407 ஆக உள்ளது.
ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலையை 20 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை ரூ. 478 என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஒரு லீற்றர் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை ரூ. 25 அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 495 ஆக உள்ளது.
ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை ரூ. 24 அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை ரூ. 434 ஆக உள்ளது.
லங்கா மண்ணெண்ணெயின் விலையை20 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை ரூ. 285, என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.








