வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே நேற்று சனிக்கிழமை (30) மாலையில் ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவு எல்லைக்குள், பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.

சம்பவத்தின் போது உயிரிழந்த பெண், வெள்ளை மற்றும் பழுப்பு நிற புடவை அணிந்து, பச்சை நிறப் பை ஒன்றை வைத்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அவரது அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

சடலம் களுபோவில மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளவத்தை பொலிஸ் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here