வெலிக்கடை பகுதியில் வாடகைக்கார் சாரதியைக் குறிவைத்து நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மே 29 அன்று கொழும்பின் வெலிக்கடை பகுதியில் இடம்பெற்றதோடு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட குறித்த காணொளியில், ஒரு நபர் வாடகைக்கார் சாரதியை அச்சுறுத்தி கொள்ளையடிக்க முயற்சிப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என நம்பப்படும் ஒரு சந்தேக நபரை அதிகாரிகள் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
கொள்ளையில் ஈடுபட்ட ஏனைய நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நடத்த இரண்டு புலனாய்வுக் குழுக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







