முன்னாள் அரச புலனாய்வு பிரிவு தலைவர் சுரேஷ் சாலே, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக தெரிவித்து, எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகிரக போராட்டம் இன்று (08) கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கியுள்ளது.

இதில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சாலே, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவர் தடுப்புக் காவல் உத்தரவுகளின் பேரில் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுரேஷ் சாலே தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது மனைவி, சாலே சந்தேக நபராக இருந்த போதிலும் மனிதாவிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here