அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இடி மின்னலால் தாக்கப்பட்டதை அடுத்து நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இலங்கையின் UL 606 என்ற குறித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதன் ஒரு இயந்திரம் இடி தாக்கத்தால் பாதிக்கப்பட்டது  எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானம் மீண்டும் கட்டுநாயக்கவுக்கு திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பயணிகள் மற்றொரு விமானத்தில் ஏற்றப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் 5 மணி நேரத்துக்கும் மேல் விமான பயணத்தில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் இந்த சம்பவத்தினால் எந்தப் பயணிகளும் காயமடையவில்லை என்பதோடு விமானத்துக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here