அராவ கரந்தகஹமட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த 4 கஜமுத்துக்களுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபிலை, மாத்தளை, பக்கமுன பகுதிகளை சேர்ந்த 49, 31, 29 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று 22ம் திகதி ஹாலி எல உடவர விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையில் இந்த கைது இடம்பெற்றது.
சந்தேகநபர்கள் அராவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.







