ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த மனு இன்று புதன்கிழமை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
குறித்த மனுவில் உள்ள முக்கியமான கோரிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் இன்று தீர்மானிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








