முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, இன்று (25) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) முன் ஆஜராகியுள்ளார்.

மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டதாகக் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக ராஜபக்ஷ குறித்த பணியகத்தில் ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக, வாக்குமூலம் அளிப்பதற்காக ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here