முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரகித ராஜபக்ஷவும், ஹொரானை பிரதேசத்துக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அமைப்பாளர் சரித் அபேசிங்கவும் காவலில் எடுக்கப்பட்டதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

கைது தொடர்பில் ஆணைக்குழு குற்றச்சாட்டுகள் அல்லது குற்றப்பத்திரிகைகளை விபரிக்கும் அதிகாரப்பூர்வ தகவல்களைப் வெளியிடவில்லை.

எனினும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here