சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவு, பிட்டிபான லெல்லம அருகே, லொறி ஒன்று சரக்குகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது நடத்தப்பட்ட சோதனையின்போது நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு மருந்துகளும் வாகனமும் கைப்பற்றப்பட்டன.

குறித்த மருந்து பொருட்கள் இரண்டு படகுகளில் கடத்தப்பட்டமை தெரியவந்துளதோடு மேலும், இரு படகுகளின் மாலுமிகளும் கைது செய்யப்பட்டு துங்கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 முதல் 49 வயதுக்குட்பட்ட குறித்த சந்தேக நபர்கள் நீர்கொழும்பு மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் தகவல் தெரிவித்துள்ளது.

(படம் -AI)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here