வெயங்கொடை பொலிஸ் பிரிவில் மிஹிந்து பெரஹேராவின் போது போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், அவர்களைத் தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29 வாடகைக் காரில் பயணித்த குழுவினர், அதிகாரிகளின் பணியில் தலையிட்டு, அவர்கள் மீது தாக்கியதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 20 மற்றும் 21 வயதுடைய, நிட்டம்புவ மற்றும் யக்கல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு வெயங்கொடை பொலிஸ் அதிகாரிகள் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here