முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வு திணைக்களம், கடந்த ஜூன் 15 , 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைகள் தொடர்பான விபரங்களை அண்மையில் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தது.
இதன்போது, வழக்கில் 3ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள சந்திரகாந்தனை அடுத்த விசாரணை தினத்தில் ஆஜர்படுத்துமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமைய, பலத்த பாதுகாப்புடன் சந்திரகாந்தன் இன்று காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.







