நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள க்ரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 16-ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (07) இதனை அறிவித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அப்பர்ன சுவர்ணதுருக்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த வழக்கில் சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு இந்தியப் பிரஜைகளுக்கு, வெளிநாட்டு சாட்சிகளுக்கான சட்டரீதியான நடைமுறையின் கீழ் அழைப்பாணைகளை (Summons) அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் 16-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அவர் அறிவித்துள்ளார்.





