அமெரிக்கா ஈரான் மீது விதித்த புதிய கடற்படை தடையும், அதற்கு பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்களும் காரணமாக இன்று (15) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 86.19 டொலராகவும், WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 80.40 டொலராகவும் அதிகரித்துள்ளது. இது ஜூன் நடுப்பகுதிக்கு பிறகு பதிவான அதிகபட்ச விலை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளமை இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
உலக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் 20% ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







