நான்கு வயது சிறுமியை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதோடு பாழடைந்த இடமொன்றில் கைவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரையும் மற்றுமொரு பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது இன்று (14) காலை ஹாலிஎல பகுதியில் நடந்துள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் ஹாலிஎல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சந்தேக நபரான பெண், சிறுமியின் தாயார் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (13)வத்தேகம – யட்டிராவன வீதியில் உள்ள பாழடைந்த இடமொன்றில் குறித்த சிறுமி இருந்தபோது, பொலிஸ் அவசர அழைப்பு எண்ணுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தேகம பொலிஸ் குழுவினர் சென்று குழந்தையை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.
முச்சக்கர வண்டியில் நேற்று காலை 7 மணியளவில் குறித்த சிறுமியை அழைத்து வந்து அந்த இடத்தில் விட்டுச் சென்றதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குழந்தையை அழைத்து வந்ததாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி தொடர்பிலான சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பாக குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.








