இஸ்ரேல் – ஹமாஸ் போர் 100 ஆவது நாளை கடந்துள்ளதுடன் போரில் வடக்கு காசா முழுவதும் நிர்மூலமாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான எல்லையை மூடும் வரை ஹமாசுக்கு எதிரான போர் முடிவடையாது என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்கு காசாவில் உள்ள எல்லை வழியாக இராணுவ உபகரணங்களும் பிற ஆயுதங்களும் தொடர்ந்து நுழைகின்றமையால்  இவ் எல்லையை மூட வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு காசா முழுவதும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருப்பதனைத் தொடர்ந்து மத்திய, தெற்கு காசாவில் ஏவுகணை குண்டு தாக்குதல் நடத்தப்படுகின்றது.

இது வரையில்  காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்கி உள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள்  எனவும்

இந்நிலையில் காசாவுக்குள் நிவாரண பொருட்கள் செல்ல அனுமதிக்காவிட்டால் அங்கு கடுமையான பஞ்சம் ஏற்படும் என்றும் ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here