14 வயது சிறுமியை காதலித்த 22 வயது இளைஞன் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞனும் அவரின் தாயாரையும் இன்று புதன்கிழமை (10.07)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சிறுமியின் தாயார் வேலை வாய்ப்புக்காக மத்தியகிழக்கு நாடு ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில் அவர் உறவினருடன் வாழ்ந்து வருகின்றார்.

இதற்கமைய அச்சிறுமி பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் நிலையில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதம்  குறித்த சிறுமியை இளைஞன் தனது வீட்டில் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவதினமான இன்று சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இளைஜனின் தாயும்  உடந்தையென  கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here