இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று T20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில் T20 தொடர் வரும் 27ஆம் திகதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து ஓகஸ்ட் 2ஆம் திகதி ஒருநாள் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் ஹர்திக் பாண்டியா T20 அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும், அதேவேளையில் ஒருநாள் போட்டித்தொடரில் அவர் விளையாடமாட்டார் எனவும் BCCI வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சொந்த காரணங்களுக்காகவே அவர், ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாகவும் மற்றபடி அவருக்கு எந்தவித உடற்தகுதி பிரச்சினையும் இல்லை எனவும் BCCI அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








