தேசிய நுகர்வோர் விலைக் சுட்டேன் NCPI) மூலம் கணக்கிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், மே 2026-ல் 5.4% ஆக அதிகரித்துள்ளது என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் பதிவான 4.7 வீதத்துடன் ஒப்பிடும்போது இவ்வாறு பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது என்று அத்துறை குறிப்பிடுகிறது.

உணவுப் பணவீக்கமும் ஏப்ரல் மாதத்தில் 1.1%-ஆக காணப்பட்ட நிலையில் மே மாதத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளது.

உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கமும் ஏப்ரல் மாதத்தில் 7.8% ஆக பதிவான நிலையில் மே மாதத்தில் 8.6% ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here