மாத்தறை, மாகந்துர பகுதியில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாயையும் அதன் நான்கு குட்டிகளையும் மலைப்பாம்பு ஒன்று விழுங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டு முற்றத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயும் அதன் நான்கு குட்டிகளும் காணாமல் போயுள்ள நிலையில் மலைப்பாம்பு ஒன்று அசைய முடியாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர், தங்களது வளர்ப்பு நாயையும் அதன் நான்கு குட்டிகளையும் இந்த மலைப்பாம்பு விழுங்கியுள்ளதை வீட்டின் உரிமையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, வெலிகம, பெலன பகுதியில் உள்ள பாம்பு பிடிக்கும் இளைஞர் ஒருவர் இந்த மலைப்பாம்பை எடுத்துச் சென்று வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








