இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார்.

இன்று ஜூன் பத்துடன், அவர் 4,399 நாட்கள் பதவி வகித்து சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இந்தச் சிறப்புமிக்க தருணத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில்,

இந்த சாதனை, மோடியின் நீண்ட பதவிக்காலத்தை மாத்திரமன்றி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் அவரது தலைமை மீது வைத்துள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலகெங்கிலும் உள்ள தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவரது தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டியுள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1947 முதல் 1964 வரை பதவி வகித்தார், அதேசமயம் இந்திரா காந்தி கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் என இரண்டு முறை பதவி வகித்தார்.

2014 மே,26 அன்று முதன் முதலில் பிரதமராகப் பதவியேற்ற மோடி, 2019-ல் பெரும் மக்கள் ஆதரவுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2024-ல் மூன்றாவது முறையாகப் பதவியேற்றார்.

கடந்த 12 ஆண்டுகளில், வறுமையைக் குறைத்தல், நலத்திட்டங்களை விரிவுபடுத்துதல், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகளை மேம்படுத்துதல், வீதி, ரயில் மற்றும் விமான நிலைய உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

இதுநேரம்,தனது 12 ஆண்டுகாலப் பயணம்,மக்களின் நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் பொது நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும், இளைஞர்கள்,பெண்கள் மற்றும் விவசாய சமூகத்தினருக்கு அதிகாரம் அளிப்பதில் தனது முழு முயற்சியையும் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here