சர்வதேச எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் இன்று (10) சிறிதளவு அதிகரித்தன.
இதற்கமைய, இன்று காலை 6.40 மணி நிலவரப்படி, ஒரு பெரல் WTI மசகு எண்ணெயின் விலை 0.85 சதவீதம் அதிகரித்து, 88.95 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
பிரென்ட் மசகு எண்ணெய் விலை 0.96 சதவீதம் கூடி, ஒரு பெரலுக்கு 92.33 டொலராக அதிகரித்துள்ளது.
எனினும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மர்பன் மசகு எண்ணெய் விலை 3.98 சதவீதம் குறைந்து, ஒரு பெரலுக்கு 88.24டொலராக சரிந்துள்ளது.








