புத்தல – கதிர்காமம் வீதியில் புலிகளின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதால் பிரதேசவாசிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாகவும் உணவு தேவைக்காகவும் இந்த புலிகள் பெரும்பாலும் பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் வீதியில் நடமாடுகின்றன.

எனவே, புத்தல – கதிர்காமம் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here