கையடக்கத் தொலைபேசி உபயோகிக்காதவர்களை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது.
ஆனால், தொலைபேசியை சரியாக கையாள வேண்டும் என்ற நோக்கத்தில் பல வகையான தவறுகளை செய்கிறோம்.
அதில் முதல் தவறு என்னவென்றால், தொலைபேசியை சார்ஜ் செய்வது.
தொலைபேசியை ஒரு நாளைக்கு எத்தனை தடவைகள் சார்ஜ் செய்ய வேண்டும்? எப்படி சார்ஜ் செய்ய வேண்டும் என்ற சில வரைமுறைகள் இருக்கின்றன.
இவற்றை சரியாக கடைபிடித்தாலே நீண்ட காலத்துக்கு பெட்டரி பழுதடையாமல் இருக்கும்.
உங்கள் கையடக்கத் தொலைபேசியின் பேட்டரி 20 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் உடனடியாக சார்ஜ் செய்துவிட வேண்டும்.
அதேசமயம் உங்கள் தொலைபேசி பேட்டரி 100 சதவீதம் வரையில் சார்ஜ் ஆகக்கூடாது. 80 சதவீதம் வரையில் சார்ஜ் ஏற்றப்பட்டால் போதும்.
100 சதவீதம் சார்ஜ் செய்தால் பேட்டரி வெடித்துவிடும்.
எனவே தொலைபேசியை சார்ஜ் செய்யும்போது 20-80 விதியை பின்பற்ற வேண்டும். அதாவது, 20 சதவீதம் டிஸ்சார்ஜ் ஆகும்போது சார்ஜ் செய்ய வேண்டும். 80 சதவீதம் சார்ஜ் ஆகும்போது அதை அகற்ற வேண்டும்.








