எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பொதுவேட்பாளர் யார்? என்ற விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் 3 பேரின் பெயர்கள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது பெயர்களே இறுதிப் பட்டியலில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் (05.08) தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here