
புத்தளம், மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருகுவட்டவ பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், தான் நடத்தி வரும் வர்த்தக நிலையத்தில் பொருள் கொள்வனவு செய்வதற்காக வந்த சிறுமியை உள்ளே அழைத்துச் சென்று இவ்வாறு துஷ்பிரயோகத்தை செய்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
சிறுமியின் தாயார் முறைப்பாட்டை பதிவு செய்ததை அடுத்து சந்தேகநபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







