புலோலி வடமேற்கு முருகன் கோவிலடி அறிவகம் சன சமூக நிலையத்தின் 69 ஆவது ஆண்டு விழா நேற்றைய தினம் சிறப்பாக இடம் பெற்றது.

சன சமூக நிலைய தலைவர் பிரபாகரன் சரனுசன், தலைமையில் பிற்பகல் 3:00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், தேசிய கொடி ஏற்றல் அறிவகம் சன சமூக நிலைய கொடியேற்றம், சிவப்பு பச்சை இல்லங்களின் கொடிகள் ஏற்றப்பட்டதை தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்திகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க  சார்பில் அதன் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், கௌரவ விருந்தினர்களாக புலோலி வட மேற்கு கிராம சேவகர் வடிவேலு சிவபரன், புலோலி வட மேற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தர்மலிங்கம் திலீப்குமார், அல்வாய் இந்து தமிழ் கலவன் பாடசாலை பிரதி அதிபர் அமிர்தகலா ஆனந்தவேல் துன்னாலை வடக்கு மெ.மி.தமிழ் கலவன் பாடசாலை அதிபர் தவயோகன் பிரதீபன், ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசில்களை வழங்கிவைத்தனர்.

முன்னதாக காலை 6:00 மணியிலிருந்து 10 கிலோமீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டிகள் கழக அங்கத்தவர்கள், மற்றும் வெளிக் கழக அங்கத்தவர்களுக்கு இடையில் நடாத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here