அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச் சேர்ந்த 48 வயது நபர், பனாகொட அத்துருகிரிய-கொடகம வீதியில் திடீரென குறுக்கே ஓடிய நாய் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளார் என்றும் காயங்களுடன் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மாத்தளையில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில், நலந்த பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய 74 வயது நபர் , A9 வீதியில் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேநேரம் மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 வயது சிறுவர் காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு விபத்துகள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








