கல்பிட்டி தோரடி குளத்தில் மூழ்கி மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்பிட்டி விஜய கடற்படை நிறுவன அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதலின் போதே இவர்களால் இவற்றை கண்டுபிடிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தங்கம் 4 கிலோ 740 கிராம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் கடற்படையினரின் தேடுதலின் காரணமாக தடாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த தங்கம் பொலித்தீன் பைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தடாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here