வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக் கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவம் திருக்கொடியேற்றத்துடன் இன்று (10) வெகுமிர்சையாக ஆரம்பமானது.

ஈழமணித்திருநாட்டின் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக் கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.

இன்று (10) காலையில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகிய கிரியை நிகழ்வுகளை தொடர்ந்துயாக பூஜை இடம்பெற்று , முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் கொடித்தம்பத்திற்கு முன் எழுந்தருளினார். பின் திருக்கொடியேற்றம் இடம்பெற்றது.

அரோகரா கோஷங்கள் முழங்க வேதபாரயணங்கள் ஒலிக்க வெகுமிர்சையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றது.

இக் கிரியை நிகழ்வுகள் யாவும் ஆலயம் பிரதம குரு சிவஶ்ரீ நவரத்தின முரசொலி மாறன், தலைமையிலான குருமார் குழுவினால் இடம்பெற்றது.

இவ் மகோற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெறும் இவ்விழாவில் எதிர்வரும் 17 ம் திகதி சனிக்கிழமை முத்துரசப்புரத்திருவிழாவும், திருவேட்டைத்திருவிழாவும், 18ம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சித்திரதேராட்டமும் , 19ம் திகதி திங்கட்கிழமை திருவோண நட்சத்திரத்துடன் கூடிய பூரணையில் சமுத்திராதீர்த்தோற்சவத்துடன் விழா இனிதே நிறைவு பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here