அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று தங்கத்தின் விலை 1%க்கும் அதிகமாக சரிந்தது.

ஸ்பொட் தங்கம் 1.03% சரிந்து ஒரு அவுன்ஸ் 4,0 045.95 டொலர்களாக பதிவானது.

ஒகஸ்ட் மாதத்தில் கொள்வனவு செய்வதற்கான அமெரிக்க தங்க ஒப்பந்தங்களும் சரிவை கண்டன.

கடந்த வாரம்,தங்கம் ஏழு மாதத்திற்கும் அதிக காலத்தின் பின் குறைந்தபட்ச நிலையை தொட்டிருந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரான், அமெரிக்காவின் பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள இராணுவ தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து இந்த வீழ்ச்சி ஏற்பட்டது.

குறித்த தாக்குதல்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இறுதி அமைதி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு ஈரான் இணங்க வேண்டும் என ஈரானை எச்சரித்திருந்தார்.

இந்த மோதல் காரணமாக ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால் அதிகரிக்கும் எரிசக்தி செலவுகள் பணவீக்கத்தை தூண்டும் என்றும், மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரிக்க தூண்டும் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

வட்டி விகிதம் அதிகரிக்கும் போது தங்கமானது முதலீட்டாளர்களால் கவர்ச்சி குறைந்ததாக  கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here