தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான நாட்டுப் பணிப்பாளர் திரு.தகாபுமி கடோனோவை ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்றையதினம் சந்தித்துள்ளார்.

திசாநாயக்க ‘X’ இல் (முன்னாள் ட்விட்டர்) ஒரு பதிவில், “இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம், மேலும் நாட்டிற்கு உதவி வழங்குவதற்கான அமைப்பின் தொடர்ச்சியான தயார்நிலையை திரு கடோனோ பகிர்ந்துகொண்டார் என பதிவிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.பிமல் ரத்நாயக்கவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here