பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்தும் ஒரு சமூக வலைத்தளமாக வாட்ஸ் அப் உள்ளது.
பயனர்களின் வசதிக்காக அடிக்கடி புதுப்புது அப்டேட்டுக்களை வாட்ஸ் அப் வெளியிடும்.
அந்த வகையில் பயனர்களின் தகவல் பரிமாற்றத்தை இலகுவாக்கும் வகையில், ஆங்கில குரல் பதிவாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை அதே மொழியில் எழுத்து வடிவில் மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் மூலம் வேறு செயலிகளைப் பயன்படுத்தி குரல் பதிவுகளை எழுத்து வடிவில் மாற்ற வேண்டிய அவசியமில்லை.
முதலில் இந்த அம்சம் ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளுக்கு வழங்க தான் திட்டமிடப்பட்டுள்ளது.








