மன்னார் கள்ளியடி அருள்மிகு ஸ்ரீ கற்பகப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக  பெருவிழா  நேற்று (22) பக்தர்களின் பங்குபற்றுதலுடன்  சிறப்பாக நடைபெற்றது.

காலை 8.20- முதல் 9.35 வரையான சுப முகூர்த்த வேலையில் விநாயகப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து  தசமங்கள தரிசனம்   எஜமான் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம் நடைபெற்று மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் இடம்பெற்றது.

கும்பாபிஷேக பெருவிழாவை தொடர்ந்து 10 நாட்களுக்கு மண்டல அபிஷேகங்கள் நடைபெற்று பன்னிரெண்டாம் நாள் 108 சங்காபிஷேகம் இடம் பெறும் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here