கொம்பன்னாவிடிய, பாலதக்ஷ மாவத்தைக்கு அருகில் உள்ள பெய்ரா ஏரியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் பேரில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் புஞ்சி பொரளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.








